மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை
14-Jul-2026
ஈரோடு:மொடக்குறிச்சி சாமிநாதபுரம் விநாயகர் கோவில் அருகே வசிப்பவர் ஜெயராஜ். இவர் மகள் ஹேமவர்ஷினி, 20. திருப்பூரில் உள்ள கல்லுாரியில் கார்டியாக் டெக்னாலஜி படித்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வாலிபருடன் பேசி பழகியுள்ளார். இதனை ஜெயராஜ் கண்டித்துள்ளார். மேலும் ஒரு மாதமாக கல்லுாரிக்கு அனுப்பாமல், வீட்டில் மகளை இருக்க செய்தார். இந்நிலையில் கடந்த, 14ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற ஹேமவர்ஷினி மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஜெயராஜ் அளித்த புகார்படி, மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.
14-Jul-2026