தீப திருநாள் வழிபாடு
தீப திருநாள் வழிபாடு அந்தியூர், டிச. 14-கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், செல்லீஸ்வரர் கோவில், பேட்டை பெருமாள் கோவில், அங்காளம்மன் கோவில், தவிட்டுப்பாளையம் சவுடேஸ்வரியம்மன் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதி கோவில்களில், பக்தர்கள் நேற்று தீபமேற்றி வழிபட்டனர். இதேபோல் பர்கூர் வனப்பகுதி கிரிமலையில், கிரி சித்தேஸ்வர சுவாமி கோவிலில், கார்த்திகை மகா தீபம் ஏற்றி, பக்தர்கள் வழிபாடு செய்தனர்.