உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திண்டல் மலையில் குவிந்த பக்தர்கள்

திண்டல் மலையில் குவிந்த பக்தர்கள்

ஈரோடுபங்குனி உத்திர விழாவையொட்டி, ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில் உள்ள, அபிராமி அம்பிகை உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில், நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்காக அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு முருகனுக்கு பால், தயிர், இளநீர் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மூலவர் ராஜ அலங்காரத்திலும், உற்சவர் வள்ளி, -தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ