ரயில் திடீர் ரத்தால் ஏமாற்றம்
ஈரோடு:ஈரோட்டில் இருந்து மேட்டூர் அணை, மேட்டூர் அணையில் இருந்து ஈரோடு செல்லும் ரயில்கள், நேற்று முழுமையாக ரத்து செய்யப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் நேற்று முன்தினம் நள்ளிரவில் அறிவித்தது. இதனால் ரயிலில் குடும்பத்துடன் சென்று வர திட்டமிட்டிருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். விடுமுறை நாட்களில் ரயில் சேவையை ரத்து செய்ய கூடாது என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.