மேலும் செய்திகள்
மக்கள் நீதிமன்றத்தில் 4,917 வழக்கிற்கு தீர்வு
14-Sep-2025
ஈரோடு, உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஈரோடு மாவட்ட சமரச மையம் மற்றும் தாலுகா சமரச மையங்களில், சிறப்பு சமரச இயக்கம்-தேசத்துக்கான சமரசம் ஜூலை முதல் செப்டம்பர் வரை 90 நாட்களநடந்தது. இதற்கான நிறைவு வெற்றி விழா, நேற்று ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி சமீனா தலைமை வகித்தார். ஈரோடு சமரச மைய செயலாளர் ஸ்ரீவித்யா, தலைமையகத்து நீதிபதிகள், வக்கீல்கள், வழக்காடிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முதன்மை மாவட்ட நீதிபதி சமீனா பேசியதாவது: சிறப்பு சமரச இயக்கம் பணியால், நீதிபதிகள் வேலைப்பளு குறைந்துள்ளது. ஈரோடு மாவட்ட நீதிமன்றங்களில், 236 வழக்குகள் பரிந்துரைக்கப்பட்டு, 84 வழக்குகளுக்கு சமரச தீர்வு கிடைத்துள்ளது. இதற்கு நீதிபதிகள், சமரசர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். சமரசர்கள் தீவிர முயற்சி எடுத்துள்ளனர். இவ்வாறு பேசினார்.சிறப்பாக பணியாற்றிய, 56 சமரசர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை, முதன்மை மாவட்ட நீதிபதி சமீனா வழங்கி வாழ்த்தினார்.
14-Sep-2025