சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பேச்சுவார்த்தை நடத்திய தி.மு.க., நிர்வாகி
ஈரோடு: ஈரோடு மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சுப்ரமணிய நகர், மாநகராட்சி, 50வது வார்டுக்கு உட்பட்டது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட வீட்டுமனைகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட, 40 பேர் தேர்தலை புறக்கணிக்க போவதாக, நேற்று காலை கையில் பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இப்பகுதியில், 300 குடும்-பங்களை சேர்ந்த, 1,500 பேர் வசிக்கின்றனர். இங்கு, 1972ல் தனிப்பட்ட நபரிடம் நிலத்தை வாங்கி சைட் போட்டு வீடு கட்-டினோம். எங்களிடம் பட்டா, பத்திரம் உள்ளது. 1994ல் வீட்டு வசதி வாரியம் தங்கள் நிலம் என கூறியது. 2017ல் வீட்டுவசதி வாரியம் தங்களுடைய இடம் என பத்திரப் பதிவு அலுவலகத்தில் நோட்டீஸ் வழங்கியது.எனவே தற்போது வரை இந்த இடத்தை விற்பனை செய்யமுடி-யாத நிலை இருக்கிறது. இதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க என நீண்ட காலமாக கலெக்டர், டி.ஆர்.ஓ.,-ஆர்.டி.ஓ.,விடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியிடமும், 100க்கும் மேற்பட்ட முறை நேரில் சென்று மனு கொடுத்தும், பிரச்னைக்கு தீர்வு கண்டு தர-வில்லை. எனவே வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க உள்ளோம். இவ்வாறு கூறினர்.இதையறிந்த தி.மு.க., மாநகர செயலாளர் சுப்பிரமணியம், நேரில் சென்று மக்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடு-பட்டார். வெளியூர் சென்ற அமைச்சர் முத்துசாமியிடம், அவர்-களை போனில் பேச செய்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை, மக்கள் கலைந்து சென்றனர்.5வது வார்டிலும்...மாநகராட்சி ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட தீபம் நகர் மக்கள், தேர்தலை புறக்கணிப்பதாக, நேற்று பேனர் வைத்துள்ளனர். அதில், கடந்த தேர்தலின் போது குடிநீர் வசதி கேட்டோம். தேர்தல் முடிந்தவுடன் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஐந்து ஆண்டுகளாகியும் அமைச்சர், கவுன்சிலர், மாநக-ராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதியை சுற்றி செய்லபடும் ரசாயன கழிவு தொழிற்சாலைகளால் நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது.இவற்றை முறைப்படுத்தி நல்ல தண்ணீர் வசதி கிடைக்கும் வரை தேர்தலை புறக்கணிக்கிறோம், என்று குறிப்பிட்டுள்ளனர். இப்ப-குதியில், 150க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டமும் செயல்படுத்தவில்லை. நான்கு வீடுகளுக்கு மட்டும் தனியாக குடிநீர் இணைப்பு வழங்-கப்பட்டுள்ளது. மற்ற வீடுகளில் வசிப்பவர்கள் பொது குடிநீரை தான் பயன்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் மாசடைந்து விட்டது என்றும், மக்கள் வேதனை தெரிவித்தனர்.