மேலும் செய்திகள்
உரையை வாசிக்காமலே கவர்னர் வெளிநடப்பு ...
07-Jan-2025
ஈரோடு, :தி.மு.க., சார்பில், கவர்னர் ரவியை கண்டித்து ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை வகித்தார்.இதில் ஈரோடு எம்.பி., பிரகாஷ் பேசியதாவது: சட்டசபை மரபை புறக்கணிக்கும் கவர்னர், தமிழகத்தை விட்டு போக வேண்டும். அதுபோன்ற கவர்னரை ஆதரிக்கும் அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கள்ளக்கூட்டணி வைத்து கொண்டு உடன் போகிறது.இச்செயல்பாடுகளை மக்கள் கவனித்துக் கொண்டே வருகின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில், 40க்கு, 40ம் தி.மு.க., கூட்டணி பெற்று, அ.தி.மு.க.,வை படுதோல்வியில் தள்ளியது. அதேபோன்று வரும், 2026 சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., 234 தொகுதிகளையும் கைப்பற்றி, சட்டசபைக்குள் இல்லாத நிலையை அ.தி.மு.க.,வுக்கு ஏற்படுத்தும்.இவ்வாறு பேசினார்.முன்னதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார், முன்னாள் எம்.பி., கந்தசாமி, கோபி குமணன், சச்சிதானந்தம் பேசினர். மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், நிர்வாகிகள் சுப்பிரமணியம், செல்லப்பொன்னி, குமார் முருகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.கடும் வெயில் வாட்டியதால், தோப்பு வெங்கடாசலம் மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் பிடித்து, தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.
07-Jan-2025