உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டிரோனில் சிறுத்தையை தேடும் பணி தீவிரம்

டிரோனில் சிறுத்தையை தேடும் பணி தீவிரம்

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் மலை குன்றில் இரு சிறுத்தைகள் பதுங்கியுள்ளன. மூன்று கூண்டுகள் வைத்தும், 20 நாட்களுக்கும் மேலாக சிக்காமல், சிறுத்தைகள் போக்கு காட்டி வருகின்றன. நேற்று முன்தினம் மலைக்குன்று முழுவதும் துப்பாக்கியுடன் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சிறுத்தை நடமாட்டம் தென்படவில்லை.இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் மாராயிபாளையம் மு.ஈ.ச.,மலை கோவில் முதல் மலைக்குன்று முழுவதும் கூடுதல் வனத்துறை ஊழியர்கள், துப்பாக்கியுடன் சிறுத்தையை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். டிரோன் கேமரா மூலமும் ஆய்வில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ