உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போதை டிரைவரால் ஜவுளி லாரி பல்டி

போதை டிரைவரால் ஜவுளி லாரி பல்டி

கோபி: நாமக்கல் அருகே திருமலை பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை, 50; லாரி டிரைவர். பெருந்துறையில் இருந்து திருப்பூர் பனியன் கம்பெனிக்கு, ஜவுளி பண்டல் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். சிறுவலுார் அருகே நேற்று காலை, 8:00 மணியளவில் சென்றார். சிறுவலுார் அருகே குறுகிய வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து, இடதுபுறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சிறுவலுார் போலீசார் விசாரணையில், டிரைவர் சின்னத்துரை மது போதையில் இருப்பது தெரியவந்தது. விபத்தில் காயமடைந்த சின்னத்துரையை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் சிதறி கிடந்த ஜவுளி பண்டல்கள் அப்புறப்படுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை