17ல் கல்வி கடன் மேளா
ஈரோடு :ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வரும், 17ம் தேதி காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை கல்லுாரி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் மேளா நடக்க உள்ளது. புதிதாக கல்லுாரிகளில் சேரும் மாணவ, மாணவியர், ஏற்கனவே கல்லுாரிகளில் படிப்பவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. அவர்கள் எளிதில் கடன் பெற, இம்மேளா நடத்தப்படுகிறது. கடன் தேவைப்படுவோர் தங்களுடைய மற்றும் பெற்றோரின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், பான் கார்டு, ஜாதிச்சான்று, பெற்றோர் ஆண்டு வருமான சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ கொண்டு செல்ல வேண்டும். தவிர, கல்வி சான்று, மதிப்பெண் சான்று, மாற்று சான்றிதழ், கலந்தாய்வு கடிதம், நுழைவு தேர்வு முடிவுகள், கல்லுாரி ஒப்புதல் கடிதம், கல்லுாரி சேர்க்கை கடிதம், கல்லுாரி கட்டண விபரம், முதல் பட்டதாரி சான்று, உறுதிமொழி சான்று எடுத்து வர வேண்டும். தவிர www.pmvidyalaxmi.co.inஎன்ற இணைய தளத்தில் வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.