விபத்தில் முதியவர் சாவு
கோபி, கோபி அருகே குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 68; கடந்த, 14ம் தேதி மதியம் கோபி அருகே காமராஜ் நகர் என்ற இடத்தில் மொபட்டில் சென்றார். திருப்பூரை சேர்ந்த ஆதர்ஷா, 20, ஓட்டி வந்த சுசுகி ஆக்சஸ் மொபட் மோதியதில் பலத்த காயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். அவரின் மகன் குமரேசன் புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.