உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கம்பத்தில் கார் மோதி முதியவர் காயம்

கம்பத்தில் கார் மோதி முதியவர் காயம்

அந்தியூர்: ஈரோடு வெட்டுக்காட்டுவலசை சேர்ந்தவர் துரைசாமி, 78; விவசாயி. இவரின் மகன் சரவணன், 44; கால்நடை வியாபாரம் சம்பந்தமாக, அந்தியூர் வாரச்சந்தைக்கு காரில் நேற்று சென்றனர். வேலை முடிந்து திரும்பியபோது, பருவாச்சி அருகே காரின் பின் டயர் பஞ்சரானது. இதில் நிலை தடுமாறிய கார், சாலையோர கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் துரைசாமிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !