உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 30 விவசாயிகளுக்கு மின் இணைப்பு

30 விவசாயிகளுக்கு மின் இணைப்பு

அந்தியூர், அந்தியூர் தாலுகா விவசாயிகளுக்கு, புதிய மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி, அந்தியூர் அருகே அண்ணாமடுவு துணை மின் நிலையத்தில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடாசலம், 11 சாதாரண வரிசை திட்ட மின் இணைப்பு, 19 சுயநிதி திட்டத்தில் மின் இணைப்பு என, 30 புதிய மின் இணைப்புகளுக்கான ஆணை வழங்கினார். இதில் கோபி கோட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன், உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அங்கப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கொடிவேரியில் 2 பெண்களிடம் 11.5 பவுன் நகை பறிப்புடி.என்.பாளையம், அக். 4விடுமுறை தினமான நேற்று முன்தினம், கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்தனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, திருப்பூர் மாவட்டம் கருணாம்பதி ஒத்தைபனைமேடு ரத்தினவேலு மனைவி மைதிலி, 50, என்பவரின், ஐந்தரை பவுன் தாலிக்கொடி; தேனி மாவட்டம் போடி நாயக்கனுார் கந்தவேல்ராஜா மனைவி பாக்கியாதேவி, 45, என்பவரின், ஆறு பவுன் தாலிக்கொடியை, மர்ம ஆசாமிகள் பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின்படி பங்களாப்புதுார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ