போர்வெல் குழாய்களை சேதப்படுத்திய யானை
சத்தியமங்கலம்:கேர்மாளம் அருகே உள்ள கானகரை மலை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வன விலங்குகள் ஊருக்குள் வருகிறது.நேற்று முன் தினம் நள்ளிரவில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஊருக்குள் புகுந்து குடிநீர் குழாய் மற்றும் போர்வெல் குழாய்களில் தண்ணீர் குடிப்பதற்காக, அவற்றை உடைத்து விட்டு காலையில் வனப் பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதி பொது மக்கள் பீதியில் உள்ளனர்.