ஈரோடு மாவட்டத்தில் நாளை இ.பி.எஸ்., பிரசார பயணம்
ஈரோடு, ஈரோட்டுக்கு, நாளை (10ம் தேதி) வருகை புரியும் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., இரு இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.தமிழகத்தில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா ஒரு இடத்தில் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். ஐந்தாம் கட்ட பிரசார பயணத்தில், ஈரோடு கிழக்கு மற்றும் மொடக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதியில் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.ஈரோடு கிழக்கு தொகுதிக்கு, வில்லரசம்பட்டி, திண்டல் ரோட்டில் இடம் தேர்வு செய்துள்ளனர். அங்குள்ள ஒரு மைதானத்தை தயார் செய்யும் பணியில், ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலர் ராமலிங்கம் தலைமையில், அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்னர்.அதேபோல, மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில், சோளிப்பாளையம் என்ற இடத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். இந்த இரு இடங்களிலும் பொதுமக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் நிற்பதற்கும், வாகனங்கள் நிறுத்தம், இ.பி.எஸ்., வாகனத்தில் இருந்து பிரசாரம் செய்யும் இடம், அவரது வருகைக்கு முன்னதாக கலை நிகழ்ச்சி நடத்தும் இடம் ஆகியவற்றை, அ.தி.மு.க.,வினர் தயார் செய்து வருகின்றனர்.