துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் தயார்
கோபி, கோபி நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, ரிப்ளக்டிங் ஜாக்கெட் மற்றும் கையுறை வழங்கப்பட உள்ளது.கோபி நகராட்சியில், நிரந்தர துப்புரவு பணியாளர்கள், 54 பேர் உள்ளனர். வார்டுகளில் குப்பையை தரம் பிரித்து வாங்கும் பணியில் ஈடுபடும் இவர்களுக்கு, ஆண்டுதோறும் ரிப்ளக்டிங் ஜாக்கெட் மற்றும் கையுறை வழங்கப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரிப்ளக்டிங் ஜாக்கெட், 100, கையுறை, 200 என தற்போது பெறப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கோபி நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.