உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிலம்ப போட்டியில் 20 பதக்கம் ஈரோடு மாணவர்கள் அபாரம்

சிலம்ப போட்டியில் 20 பதக்கம் ஈரோடு மாணவர்கள் அபாரம்

ஈரோடு, யூத் கேம் அமைப்பு சார்பில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி டெல்லியில் நடந்தது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கான, ஆந்திரா என, 13 மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து, 600 பேர் பங்கேற்றனர். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 15 வீரர்கள் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம், மூன்று பேர் இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கம், இருவர் மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கம் என, 20 பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் ரயிலில் ஈரோட்டுக்கு நேற்று வந்தனர். ரயில்வே ஸ்டேஷனில் மாவட்ட சிலம்பாட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பெற்றோர்கள், சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை