ஈ.வி.கே.சம்பத் பிறந்த நாள் விழா
ஈரோடு: முன்னாள் எம்.பி., ஈ.வி.கே.சம்பத், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு சம்பத் நகரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் முத்துசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாநகர் மாவட்ட காங்., தலைவர் ராஜேஷ் ராஜப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.