உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

கோபி:கவுந்தப்பாடி அருகே சிறுவலுார் சாலையை சேர்ந்த பிரபு மகன் ஆதிகேசவ், 14; பெருந்துறையில் ஒன்பதாம் வகுப்பு முடித்துவிட்டு, பத்தாம் வகுப்புக்கான சிறப்பு பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார்.நேற்று முன்தினம் காலை பள்ளி செல்வதாக ஆதிகேசவ் வெளியே புறப்பட்டு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. பள்ளியை பெற்றோர் தொடர்பு கொண்டு கேட்டபோது, பள்ளிக்கே செல்லாதது தெரிய வந்தது. பிரபு புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ