உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாக்கு உற்பத்தி உர மேலாண்மை

பாக்கு உற்பத்தி உர மேலாண்மை

ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் பவானி, அந்தியூர், கோபி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் பாக்கு சாகுபடி செய்யப்படுகிறது. இதில் அதிக விளைச்சல் பெற, மண் பரிசோதனை வழிகாட்டுதல் படி, உர மேலாண்மை முறைகளை பின்பற்ற வேண்டும்.பாக்கு மரங்களுக்கு பிற சத்துக்களை விட அதிக அளவில் நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் சத்து தேவைப்படுகிறது. விளைச்சல் தரும் ஒரு பாக்கு மரம் பாஸ்பரஸை விட, 10 மடங்கு நைட்ரஜன், 8 மடங்கு பொட்டாசியத்தை உறிஞ்சுகிறது. இவற்றின் சம நிலையை உறுதிப்படுத்த சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பாஸ்பரஸ் அதிகம் பயன்படுத்தினால், துத்தநாகம் கிடைக்கும் தன்மை குறைந்து, பற்றாக்குறை, பயிர் விளைச்சலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உர மேலாண்மையை கவனத்துடன் பயன்படுத்தி, பாக்கு சாகுபடியில் அதிக விளைச்சல் பெற, வேளாண் அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ