உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காய்ச்சல், சளி, பாதிப்பு; உயரும் நோயாளிகள்

காய்ச்சல், சளி, பாதிப்பு; உயரும் நோயாளிகள்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை, பனியுடன் சீதோஷ்ண நிலை மாறி உள்ளது. இதனால் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல், சளி, இருமல், தலைவலி உள்ளிட்ட உடல் உபாதை, நோய்களுக்கு சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெயர் பதிவு செய்யும் இடம், சிகிச்சை பெறும் இடம், உள் நோயாளிகள் பிரிவு, மருந்து, மாத்திரை வாங்கும் இடம் ஆகியவற்றில் நோயாளிகள், அவர்களுடன் வந்தவர்கள் என கூட்டம் அதிகரித்துள்ளது.இதுபற்றி மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாவது: சாதாரண நாட்களில், காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, பிற பிரச்னைகளுக்கு, 250 முதல், 300 பேர் வெளி நோயாளிகளாகவும், 30 முதல், 50 பேர் உள் நோயாளிகளாக வருவார்கள். இவை தவிர, பிரசவம், விபத்து, நீண்ட கால நோய்களுக்கு தினமும், 300க்கும் மேற்பட்டோர் வருவர். தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால், 500க்கும் மேற்பட்டோர் தினமும் வருகின்றனர். டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு தனி வார்டு உள்ளதால், அங்கு ஓரிருவர் மட்டும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !