தேங்காய் நார் மில்லில் தீ ரூ.25 லட்சத்துக்கு சேதம்
காங்கேயம், காங்கேயத்தை அடுத்த நத்தக்காடையூர், நஞ்சப்பகவுண்டன் வலசை சேர்ந்தவர் மனோகரன், 58; நத்தக்கடையூர் லட்சுமிபுரம் பகுதியில் சிவ விநாயகா காயர்ஸ் என்னும் தேங்காய் நார் கம்பெனியை, 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். நேற்று மதியம், 2:00 மணி அளவில் மில்லின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது. இதில் தேங்காய் நார் கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.ஆனாலும் தேங்காய் நார், இயந்திரம், ஜே.சி.பி., வாகனம், டிராக்டர் டிரெயல்லர் எரிந்து விட்டது. சேத மதிப்பு, 25 லட்சம் ரூபாய் இருக்கலாம் எனத் தெரிகிறது. விபத்துக்கான காரணம் குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.