உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

ஈரோடு; ஈரோடு மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ள வைராபாளையத்தில், குப்பையில் இருந்து உர-மாக்கும் யூனிட் உள்ளது. இங்கு நேற்று காலை, 6:25 மணிக்கு தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் பரவி எரியத் தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் மக்கும் குப்பை, குப்-பையை உரமாக்கும் இயந்திரம், கன்வேயர் பெல்ட் உள்ளிட்டவை தீக்கிரையாகின. அதிக வெப்பம் காரணமாக குப்பையில் தீப்பிடித்து பர-வியது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !