மேலும் செய்திகள்
குடோனில் தீ விபத்து
11-Oct-2025
பவானி, சித்தோடு, பவானி சாலையை சேர்ந்தவர் ஜெகவீர்சிங். இவர் இதே பகுதியில், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில், திடீரென தீ பிடித்தது. சம்பவ இடத்திற்கு வந்த பவானி தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில், ஒரு லட்சம் மதிப்பிலான பனியன்கள் மற்றும் இதர பொருட்கள் எரிந்து சாம்பலானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
11-Oct-2025