உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லேத் பட்டறையில் தீ விபத்து

லேத் பட்டறையில் தீ விபத்து

ஈரோடு: ஈரோடு பச்சைபாளி நால்ரோடு அருகே, ரவிக்குமார் என்பவ-ருக்கு சொந்தமான பவளம் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லேத் பட்-டறை உள்ளது. பட்டறைக்குள் இருந்து நேற்று மதியம் கரும்புகை வெளியேறியது. அங்கிருந்த பொதுமக்கள் அளித்த புகார்படி, ஈரோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அதற்குள் தீ தானாகவே அணைந்து, கரும்புகை வருவது நின்றது. சாமி கும்பிட சாம்பிராணியை பற்ற வைத்துள்ளனர். அதன் பின், அங்கிருந்து சென்று விட்டனர். சாம்பிராணி தணல், காற்றில் அருகில் இருந்த புத்தகங்களில் பரவி தீப்பற்றியது தெரியவந்தது. இதில் மின் சாதனங்கள் மட்டும் லேசாக கருகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !