சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு
காங்கேயம்: காங்கேயம் அருகே பச்சாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், காங்கயம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில், தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. தீ விபத்தின் போது உயிர் சேதம் மற்றும் பொருட்சேதங்களை தடுத்து பாதுகாக்கும் முறை, தீயணைப்பு உபகரணங்களை பயன்படுத்தும் விதம் குறித்து செயல் விளக்கம் அளித்தனனர். தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் ஞானசேகரன், வட்டார மருத்துவர், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.