உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேவல் சூதாட்டம்நான்கு பேர் கைது

சேவல் சூதாட்டம்நான்கு பேர் கைது

கொடுமுடி:கொடுமுடி, இச்சிபாளையம், வடக்கு வீதியை சேர்ந்தவர் தமிழரசன், 29, மேற்கு வீதியை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன், 35; கொடுமுடி, நாகபாளையம், மலைகாடு, கோனார் தோட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 24; கரூர், தொப்பம்பட்டி கோகுல், 31 ஆகியோர், தமிழரசன் வீட்டில் சேவல்களை சண்டையிட செய்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த கொடுமுடி போலீசார் அங்கு சென்று, இரு சேவல்கள், 5,120 ரூபாய், யமஹா மற்றும் பல்சர் பைக்கை கைப்பற்றினர். வழக்குப்பதிந்து நால்வரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !