உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரத்து அதிகரிப்பால்பலாப்பழம் விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால்பலாப்பழம் விலை வீழ்ச்சி

ஈரோடு:ஈரோடு, வ.உ.சி., மைதானம் அருகே செயல்படும் தினசரி காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில், சீசனுக்கு ஏற்ப அனைத்து பழ வகைகளும் மொத்த, சில்லறை விற்பனையில் விற்கப்படும். தற்போது பலாப்பழம் சீசன் காலமாக உள்ளதால், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, பண்ருட்டி மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலாப்பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு வரத்தாகிறது.ஈரோடு மார்க்கெட்டுக்கு பலாப்பழங்கள் அதிகமாக விற்பனைக்கு வரத்தானதால், கடந்த, 2 நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரு கிலோ, 20 ரூபாயாக குறைந்து விற்பனையானது.பழங்கள் அதிகமாக இருப்பு இருப்பதால், முழுப்பழமாகவும், வெட்டி வைத்தும் விற்பனை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை