உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஸ்ரீஜெய் விகாஸ் பப்ளிக் பள்ளியில் பரிசளிப்பு விழா

ஸ்ரீஜெய் விகாஸ் பப்ளிக் பள்ளியில் பரிசளிப்பு விழா

சென்னிமலை: -சென்னிமலை யூனியன் உலபுரம் அருகே ஸ்ரீஜெய் விகாஸ் சி.பி.எஸ்.இ., பப்ளிக் பள்ளி செயல்படுகிறது. மாணவர்களின் படைப்பாற்றல், கலையுணர்வை வெளிக்கொணரும் வகையில், பள்ளி நிர்வாகம் சார்பாக ஓவியப்போட்டி நடந்தது. பல்வேறு மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இயற்கை, கலாச்சாரம், சமூக விழிப்புணர்வு மற்றும் எதிர்காலம் போன்ற கருப்பொருள்-களில் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது.ஸ்ரீஜெய் விகாஸ் பப்ளிக் பள்ளித்தலைவர் அருண்குமார் ஈஸ்வர-மூர்த்தி தலைமை வகித்து பேசினார். பள்ளி இயக்குனர் நந்-தினி சதீஷ்குமார் சிறப்புரையாற்றினார். பள்ளி செயலாளர் ரேவதி, வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ