அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்
தாராபுரம்:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, அரசு ஊழியர் சங்கம் சார்பில், தாராபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் கோஷமிட்டனர். வட்ட கிளை செயலாளர் தில்லையப்பன், வருவாய்த்துறை அலுவலர் சங்க இணை செயலாளர் சரவணன், மணிமொழி உள்பட பலர் பங்கேற்றனர்.