மேலும் செய்திகள்
இருவர் மீது பாய்ந்த குண்டர் தடுப்பு சட்டம்
15-Oct-2025
அந்தியூர், ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே காலனியை சேர்ந்தவர் கார்த்தி, 38, டிராக்டர் டிரைவர். கடந்த மாதம், 2ம் தேதி, அந்தியூர் காலனியில் தனியாக துாங்கி கொண்டிருந்த, 25 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ஜாதி பெயரை கூறி திட்டியுள்ளார். புகார்படி, அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி, கார்த்தியை கைது செய்து கோபி சிறையில் அடைத்தனர்.ஏற்கனவே, பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால், போக்சோ வழக்கில் கைதாகி விடுதலையானார். மீண்டும் மீண்டும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததால், கார்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., சுஜாதா பரிந்துரை செய்தார். இதன்படி, நேற்று கலெக்டர் கந்தசாமி, குண்டர் தடுப்பு சட்டத்தில் கார்த்தியை கைது செய்ய உத்தரவிட்டார்.
15-Oct-2025