மேலும் செய்திகள்
இ.முன்னணி ஆர்ப்பாட்டம்
28-Aug-2024
ஈரோடு: பங்களாதேஷ் இந்துக்களை காப்பாற்ற வேண்டும். அங்குள்ள இந்து கோவில்கள், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகிறது. இந்துகள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஈரோடு மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், ஈரோட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர மாவட்ட தலைவர் ஜெகதீசன், மாவட்ட பொது செயலாளர் கார்த்தி, மாவட்ட செயலாளர்கள் சங்கர், முரளி, ரமேஷ், விவேக் குமார், கார்த்திகேயன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கவின், பழனிவேல், சதீஷ்குமார், விஜய், ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்ளிட்ட இந்து முன்னணியினர் பங்கேற்றனர்.
28-Aug-2024