உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்

மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்

ஈரோடு:புரட்டாசி மாதம், 18ல் துவங்குகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். இந்நிலையில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையான நேற்று, ஈரோட்டில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்தனர்.இதனால் ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் விற்பனைஅதிகரித்தது. வஞ்சிரம் கிலோ, 800 ரூபாய்க்கு விற்றது.இதேபோல் கருப்பு வாவல் கிலோ--550, கடல் அவுரி-500, முரல்-350, கனவா-300, சங்கரா-400, இறால்-600, கிளி மீன்-500, கடல்பாறை 550, தேங்காய் பாறை-400, திருக்கை-400, கொடுவா-600, சால்மோன்-700, கடல்சுறா-400 ரூபாய்க்கும் விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !