மேலும் செய்திகள்
நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
06-Mar-2025
சத்தியமங்கலம் : தமிழகம் முழுவதும் பரவலாக, நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு, மூன்று மாதமாக கூலி வழங்கப்படவில்லை. மத்திய அரசு நிதி ஒதுக்காததே காரணம் என்று, தமிழக அரசு கூறி வரும் நிலையில், நிலுவை கூலி கேட்டு, தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.இந்நிலையில் நிலுவை கூலி கேட்டு, இ.கம்யூ., கட்சி சார்பில், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்தர் தலைமையில், சதுமுகை பஞ்., அலுவலகம் எதிரே நேற்று காத்திப்பு போராட்டம் நடந்தது. தொழிற்சங்க தலைவர் ஸ்டாலின் சிவகுமார், நிர்வாகிகள் உட்பட நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
06-Mar-2025