உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 4வது நாளாக ஐ.டி., சோதனை

4வது நாளாக ஐ.டி., சோதனை

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களில் நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை நேற்றும் தொடர்ந்தது.மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மேரிகோ லிமிடெட் நிறுவனம், பாராசூட் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்கிறது. நிறுவனத்துக்கு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில், கொப்பரை கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு கடந்த, 17ம் தேதி காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். நான்காவது நாளாக நேற்றும் சோதனை நீடித்தது.இதேபோல் பூந்துறையை அடுத்த மின்னகாட்டு வலசில் தட்சிணாமூர்த்திக்கு சொந்தமான கொப்பரை கொள்முதல் நிலையம், பெருந்துறை சிப்காட்டில் உள்ள மேரிகோ லிமிடெட்டிலும், 17ம் தேதி தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, நான்காவது நாளாக நேற்றும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை