உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 17ம் தேதி முதல் ஜமாபந்தி

17ம் தேதி முதல் ஜமாபந்தி

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி, வரும், 17ம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை நிறைவடைகிறது.தாளவாடி தாலுகாவில், 17ல் கலெக்டர் கந்தசாமி துவக்கி வைக்கிறார். பவானியில், 17 முதல், 19 வரை ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமார் ஜமாபந்தியை நடத்துகிறார்.மொடக்குறிச்சி, கொடுமுடி, நம்பியூர் தாலுகாவில், 17 முதல் 19; ஈரோடு, அந்தியூர் தாலுகாவில், 17 முதல் 23; பெருந்துறை, கோபி, சத்தி தாலுகாவில், 17 முதல் 24 வரை (சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கள்கிழமை நீங்கலாக) துணை கலெக்டர்கள் நிலையில், அந்தந்த தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடக்கும். மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் சமர்ப்பித்து உரிய நிவாரணம் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை