மேலும் செய்திகள்
தனி நலவாரியம்: பால் முகவர்கள் கோரிக்கை
23-Sep-2025
ஈரோடு: காலைக்கதிர் முகவர்கள் குடும்ப விழா நேற்று ஈரோட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் ஈரோடு, கரூர் மாவட்ட முகவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். அவர்க-ளுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.மக்களின் மன சாட்சியாக உள்ள காலைக்கதிர் நாளிதழ் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த வெற்றியின் பின்னணியில் காலைக்கதிர் நாளிதழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முகவர்களின் உழைப்பை சிறப்பிக்கும்படி முகவர்கள், 'குடும்ப விழா-2025' ஈரோடு முனிசிபல் காலனி சுப்பிரமணிய கவுண்டர் மஹால் திருமண மண்டபத்தில் நேற்று கொண்டாடப்-பட்டது.முதலில் வந்த முகவர்களின் இல்லத்தரசிகள், 5 பேர் குத்து-விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர். தொடர்ந்து காலைக்-கதிர் வெள்ளி நாணயத்தை அதன் ஆசிரியர் ராமச்சந்திரன், பொது மேலாளர் ஜெரால்டு வெளியிட, விற்பனை மேலாளர் செந்தில்-குமார் பெற்று கொண்டார்.தொடர்ந்து சிறப்பு அமர்வில் செல்வம் சேர்க்கலாம் வாங்க தலைப்பில் எழுத்தாளர் செல்வேந்திரன் பேசியதாவது:அறத்துடன் கூடிய தொழில் பத்திரிக்கை. நாளிதழ்கள் ஆரம்பிக்-கப்பட்ட போது வியாபார நோக்கம் இல்லை. சுதந்திர போராட்-டத்தை மக்கள் தெரிந்து கொள்ளவே நாளிதழ்கள் துவங்கப்பட்-டன. இதில் முகவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களாக நாளிதழை மக்களிடம் சுதந்திர போராட்ட காலத்தில் சேர்த்தனர்.'டிவி' சமூக ஊடகங்களில் வருவதை மக்கள் வதந்தியாக பார்க்கின்றனர். பொறுப்பு ஏற்கும் நாளிதழ்களை மக்கள் நம்புகின்-றனர். நம்பிக்கை, தரம், நிலைபாடு பார்த்து வாசகர்கள் நாளிதழை படிக்கின்றனர்.அடுத்த, 6 மாத காலங்களில், 8 சதவீதம் வரை நாளிதழ்கள் விற்-பனை அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. விற்ப-னையில் தடைகளை பார்க்க கூடாது. வாய்ப்புகளை மட்டுமே பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து ஈரோடு,கரூர் மாவட்ட அனைத்து முகவர்களுக்கும் காலைக்கதிர் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் முகவர் குடும்பத்தினருக்கு, தனித்தனியே புகைப்படங்களை அச்-சிட்டு பெற்று சென்றனர்.
23-Sep-2025