கே.எம்.சி.ஹெச்., சார்பில் 20ல் இலவச மருத்துவ முகாம்
ஈரோடு, கோவில்பாளையம் கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை, சத்தியமங்கலம் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, சத்தி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் (போலீஸ் ஸ்டேஷன் எதிரில்) வரும், ௨௦ம் தேதி காலை, 9:௦௦ மணி முதல் மதியம், 1:௦௦ மணி வரை, மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடத்துகிறது.முகாமில் இருதயம், நரம்பியல், மூளை மற்றும் தண்டுவடம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை, குழந்தைகள் நலம், பொது நலம், தோல் நோய், பொது அறுவை சிகிச்சை, பல் மருத்துவ துறைகளின் சிறப்பு மருத்துவர்கள் இலவச ஆலோசனை வழங்கவுள்ளனர். சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள், முகாமை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, 87541 87551 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.