உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா

பவானிசாகர்:பவானிசாகரை அடுத்த எரங்காட்டூரில் உசிலா மாரியம்மன், செங்காளியம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு உசிலா மாரியம்மன் கோவில் அகற்றப்பட்டு, புதியதாக கோபுரத்துடன் கூடிய கோவில் கட்டப்பட்டு திருப்பணி நடந்தது. கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முதலில் கோபுர விமான கலசத்துக்கும், மூலவருக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டதை தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. c


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !