உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுத்தை குட்டிகளால் மலை கிராமத்தில் பீதி

சிறுத்தை குட்டிகளால் மலை கிராமத்தில் பீதி

சத்தியமங்கலம், தாளவாடி வனச்சரக எல்லையில் பாரதிபுரம் மலை கிராமத்தில், ஓய்வு பெற்ற பி.டி.ஓ., சுப்பிரமணியின் கரும்பு தோட்டத்தில் சில நாட்களுக்கு முன், கரும்பு வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிறந்து, ௧௫ நாட்களேயான பெண் சிறுத்தை குட்டி ஒன்று கிடந்தது.தகவலின்படி சென்ற வனத்துறையினர் குட்டியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். தாய் சிறுத்தையை கண்காணிக்க கேமராக்களும் பொருத்தினர். நள்ளிரவில் குட்டியை தாய் சிறுத்தை துாக்கி சென்றது. இந்நிலையில் நேற்று மதியம் அதே பகுதியில் அருகிலுள்ள ஒரு கரும்பு தோட்டத்தில், 3 சிறுத்தை குட்டி தென்பட்டுள்ளது. வனத்துறையினர் குட்டிகளை கண்காணித்து வருகின்றனர். அடுத்தடுத்து சிறுத்தை குட்டிகள் தென்படுவதால், பாரதிபுரம் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை