உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூரில் சிங்கப்பெண் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அந்தியூரில் சிங்கப்பெண் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அந்தியூர்:அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன், பொதுமக்கள், பெண்கள் மத்தியில் சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் பாப்பிலா ஜாஸ்மின், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை எடுத்துக்கூறி, அதிலிருந்து தற்காத்து கொள்வது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட நுணுக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், அந்தியூர் பஸ் ஸ்டாண்ட், கார் ஸ்டாண்ட், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். அப்போது, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கஸ்துாரி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை