உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பராமரிப்பு பணி ரயில்களை நிறுத்தி இயக்கம்

பராமரிப்பு பணி ரயில்களை நிறுத்தி இயக்கம்

ஈரோடு; சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி மற்றும் வீர-பாண்டி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் ஈரோடு வழியாக இயக்கப்படும், இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள், வழியில் நிறுத்தி வைக்கப்படும்.இதன்படி எர்ணாகுளம் - டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயில் எண்: 18190 நாளை (17), 20, 22, 24, 27 தேதி-களில் வழியில் ஏதேனும் ஒரு ஸ்டேஷனில், 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். அதேபோல் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 13352) நாளை (17), 20, 22, 24, 27 தேதிகளில் ஏதேனும் ரயில்வே ஸ்டேஷனில், 20 நிமிடம் நிறுத்தி வைத்து இயக்கப்படும். இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்-துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை