உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின்வேலியில் சிக்கி இறந்த பெண்ணை புதைத்தவர் கைது

மின்வேலியில் சிக்கி இறந்த பெண்ணை புதைத்தவர் கைது

டி.என்.பாளையம் : ஈரோடு மாவட்டம், பங்களாபுதுார் அருகே அண்ணாநகரை சேர்ந்த ஆனந்தராஜ் மனைவி ஜோதிமணி, 55. மே 17ம் தேதி வீட்டில் இருந்து சென்றவர் மாயமானார். அவரது மகன் கவுதம், பங்களாபுதுார் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிந்து பெண்ணை தேடினர்.இந்நிலையில், அதே பகுதியில், பெரியசாமி, 57, என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் தோட்டத்தில், தாயின் சடலம் புதைக்கப்பட்டிருந்ததை, நேற்று முன்தினம் அறிந்த கவுதம், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பெரியசாமியை போலீசார் நேற்று கைது செய்தனர்.வன விலங்குகளுக்காக தோட்டத்து வேலியில், பெரியசாமி மின்சாரம் பாய்ச்சி வந்துள்ளார். ஜோதிமணி அதில் சிக்கி பலியாகி விட்டார். மின்சார வேலியில் சிக்கி ஏற்கனவே ஒரு யானை பலியானது. வனத்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமினில் வந்துள்ளார். இந்நிலையில் மின் வேலியில் சிக்கி பெண் பலியானதால் அதிர்ச்சியடைந்து, சடலத்தை தன் தோட்டத்திலேயே புதைத்து விட்டார் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ