உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின்சாரம் தாக்கிமேஸ்திரி பலி

மின்சாரம் தாக்கிமேஸ்திரி பலி

ஈரோடு :கொடுமுடி நகப்பாளையம் அரிசன காலனியை சேர்ந்த வீரன் மகன் ரகுபதி, 24, கட்டட மேஸ்திரி. திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. குழந்தைகள் இல்லை. நேற்று காலை கொடுமுடி தெற்குபுதுபாளையம் அரிசன காலனி யில், விஜயகுமார் என்பவர் வீட்டின் மாடியில் உள்ள பாத்ரூம் சுவிட்சுக்கு, பூச்சு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கையில் வைத்திருந்த மட்டபலகை அருகில் இருந்த மின் கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி ரகுபதி துாக்கி வீசப்பட்டு மூச்சு, பேச்சின்றி கிடந்தார். அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !