உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்தல் பிரசாரத்தில் களமிறக்கப்பட்ட அமைச்சர் முத்துசாமியின் மகன்

தேர்தல் பிரசாரத்தில் களமிறக்கப்பட்ட அமைச்சர் முத்துசாமியின் மகன்

ஈரோடு, ஈரோடு மேற்கு தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் அமைச்சர் முத்துசாமி, இதுவரை தனது குடும்பத்தினரை பிரசாரம் உட்பட அரசியலில் நேரடியாக களம் இறக்கியதில்லை. அவரது மகன் ராஜா, சென்னையில் வசிப்பதுடன், கட்டுமானம், விற்பனை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.இத்தேர்தலில் தனது தொகுதியில் பிரசாரத்துக்கு மகன் ராஜாவையும் களம் இறக்கி உள்ளார். வீரப்பன்சத்திரம் பகுதியில் பகுதி செயலர் நடராஜன் உட்பட நிர்வாகிகளுடன் சேர்ந்து, நேற்று வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்தந்த பகுதி முக்கிய நபர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம், அவரை அறிமுகம் செய்து வைத்து ஓட்டு சேகரிப்பை நடத்தினர்.அமைச்சரின் மகன் பிரசார களத்தில் இறங்கி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ