மேலும் செய்திகள்
பைக் மீது டிராக்டர்மோதி விவசாயி பலி
01-Apr-2025
காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த பச்சாபாளையம் ஊராட்சி கண்ணபுரத்தை சேர்ந்தவர் தி.மு.க., துணை கிளை செயலாளராக இருந்தவர் ரூபன் ஜோசப், 64. இவர் ஓய்வு பெற்ற கிராம உதவியாளராக இருந்தார். நேற்று காலை வீட்டிலிருந்து, காங்கேயத்திற்கு ஸ்கூட்டி வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காங்கேயம் ரோட்டில் தனியார் பனியன் மில் அருகே சென்றபோது, பின்னால் வந்த வடுகபட்டியை சேர்ந்த பழனிசாமி என்பவர் ஓட்டி வந்த ஹோண்டா கார் ஸ்கூட்டர் மீது மோதியது.அருகில் இருந்தவர்கள் ரூபன் ஜோசப்பை மீட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். போலீஸ் விசாரணையில், இடது புறமாக ஸ்கூட்டரில் சென்ற ரூபன் ஜோசப், திடீரென சாலையின் வலதுபுறம் செல்வதற்கு வாகனத்தை திருப்பியதாகவும், அப்போது பின்னால் வந்த பழனிசாமி தனது காரை உடனடியாக கட்டுப்படுத்த முடியாமல் ஸ்கூட்டரின் மீது மோதியது தெரியவந்தது.வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
01-Apr-2025