மேலும் செய்திகள்
செங்கையில் 21ம் தேதி தொழில் பழகுநர் முகாம்
12-Jan-2026
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு, தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு, தொழிற் பழகுநர் பயிற்சி அளிக்கும் வகையில், ஈரோட்டில் காசிபாளையத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில் பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் இன்று காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது.மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள், அப்ரண்டிஸ்களை தேர்வு செய்யவுள்ளனர். பயிற்சியாளர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ், என்.டி.சி சான்றிதழ், மொபைல்போன் எண், இ.மெயில் ஐ.டி, ஆதார் அட்டை, வங்கி பாஸ் புக் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் வந்து பயன்பெறலாம். தகவலுக்கு, 94424-94266, 96260-43592 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
12-Jan-2026