மேலும் செய்திகள்
இடி, மின்னலுடன் கனமழை
28-Sep-2024
பவானிசாகரில் 19.4 மி.மீ., மழைபுன்செய் புளியம்பட்டி, செப். 30-பவானிசாகர் மற்றும் புன்செய் புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலுடன் வறண்ட வானிலை நீடித்து வந்தது. நேற்று முன்தினம் மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் இரவு, 11:00 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஒரு மணி நேரம் மழை பெய்ததால், நால்ரோடு, தொப்பம்பாளையம், கொத்தமங்கலம் பகுதி விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது.நேற்று காலை நிலவரப்படி பவானிசாகரில், 19.4 மி.மீ., மழை பதிவானது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், சுற்று வட்டார குளம், குட்டை, தடுப்பணைகளுக்கு ஓரளவுக்கு நீர் வரத்துவங்கியுள்ளது. கிணறுகளில் நீர் ஊற்றெடுக்க துவங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல், புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில்,நேற்று முன்தினம் இரவு, 11:30 மணி முதல் சாரல் மழை பெய்தது.
28-Sep-2024