உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒப்பந்த பணியை ஒழிக்க செவிலியர் வலியுறுத்தல்

ஒப்பந்த பணியை ஒழிக்க செவிலியர் வலியுறுத்தல்

ஈரோடு, தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், ஈரோடு மாவட்ட தலைவர் ஜெயசுகி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நடைமுறையில் இருந்து பறிக்கப்பட்ட செவிலியர் கண்காணிப்பாளர் தரம்-2, பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். செவிலியர் பணி தொடர்பான உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கை கைவிட வேண்டும். எம்.ஆர்.பி., தேர்வாணையம் மூலம் பணி அமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். 11 மாத கால ஒப்பந்த பணி முறையை அறவே ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை