ஆக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்
ஆசிரியர், அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழு (ஆக்டோ-ஜியோ) சார்பில், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கிடு தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதி எண்:309ன்படி சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பணி செய்யும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட, 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். காலவரையற்ற வேலை நிறுத்தத்தையும் நேற்று துவங்கினர்.